புதுக்கோட்டை சந்தைப்பேட்டையில் குடிசைமாற்று வாரியத்தால் கட்டப்பட்டுள்ள அடுக்கு மாடி குடியிருப்புகளுக்கு சாலை அமைக்கப்படாததால் குடிசைவாசிகள் காத்திருக்கும் நிலை நீடிக்கிறது.
புதுக்கோட்டை சந்தைப்பேட்டை பகுதியில் குடிசை வீடுகள் அமைத்து அருந்ததியர் உள்ளிட்ட பழங்குடியின மக்கள் சுமார் 200 பேர் வசித்து வருகின்றனர். அந்தப் பகுதி "ஷூமேக்கர் காலனி' என அழைக்கப்பட்டு வருகிறது. மழை காலங்களில் காலனிப் பகுதியில் வெள்ள நீர் புகுந்துவிடுவதால் மக்கள் அவதிப்படுவதும் தொடர்கதையாக இருந்தது.
இதையடுத்து இந்தப் பகுதி மக்களுக்கு நிரந்தர குடியிருப்பு கட்டித்தர வேண்டும் என பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டில் மாவட்ட சிறைக்கு எதிரே உள்ள நிலத்தில் குடிசை மாற்று வாரியம் மூலம் ரூ.2 கோடியே 64 லட்சத்தில் 84 வீடுகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன.
சுமார் 6 மாதங்கள் கடந்தும்,அங்கு மின் இணைப்பு,மற்றும் சாலை வசதி மேற்கொள்ளப்படவில்லை.
இந்தக் குடியிருப்புப்பகுதிக்கு சாலை அமைப்பதில் இங்குள்ள வாடகை லாரி சந்தையால் நடைமுறைச்சிக்கல் உருவானது. சாலையை பாதுகாப்பான மாற்று வழியில் அமைப்பது குறித்த யோசனைகள் முன்வைக்கப்பட்டன.
இந்த நிலையில் கடந்த 12.10.2012-ம் தேதி மாநில வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலர் கே. பணீந்தரரெட்டி, குடிசை மாற்று வாரிய நிர்வாக இயக்குநர் வி. சந்திரசேகரன் ஆகியோர் இப்பகுதியில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது வாடகை லாரி சந்தையின் மேற்குப்பகுதியின் ஓரத்தில் உள்ள சுமார் ஒன்றரை மீட்டர் நிலத்தை அகலப்படுத்தலாம் என்றும்,அதற்காக லாரி உரிமையாளர்கள் அமைத்திருக்கும் அலுவலகங்களை சற்று தள்ளி அமைக்கலாம் எனவும் அதற்காக திட்ட அறிக்கை மற்றும் வரைபடத்தை அனுப்பி வைக்குமாறு நகராட்சி ஆணையர் மற்றும் குடிசைமாற்று வாரிய பொறியாளர்களிடமும் அறிவுறுத்திச் சென்றனர்.
சாலை அமைக்க நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே மின் இணைப்பு கிடைத்து தெரு விளக்குகள் அமைக்க முடியும் எனவும்,அதன் பிறகே மாவட்ட நிர்வாகம் அளித்துள்ள பயனாளிகள் பட்டியலில் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு வீடுகளை ஒப்படைக்கும் பணிகள் தொடங்கும் எனவும் குடிசைமாற்று வாரிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து நகராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்குமா? என்பதே அந்தப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளத்தில் ரூ.100 கோடி வசூலித்த வாழ - 2..! புதிய சாதனை!
நாட்டின் அரசியல் வரைபடத்தையே மாற்றும் முயற்சி! ராகுல் காந்தி

மிஸ்பண்ணிடாதீங்க... இந்தியன் வங்கியில் 350 சிறப்பு அலுவலர் பணி!

காங்கிரஸ் தலைவர் பவன் கேராவுக்குப் பாதுகாப்பு அளிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

