சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
புதுக்கோட்டையில் 24-வது சாலைப் பாதுகாப்பு வார விழாவையொட்டி, விழிப்புணர்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


புதுக்கோட்டையில் 24-வது சாலைப் பாதுகாப்பு வார விழாவையொட்டி, விழிப்புணர்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பழைய பேருந்து நிலையம் அருகே பொது அலுவலக வளாகத்தில் இருந்து பேரணியை மாவட்ட ஆட்சியர் செ. மனோகரன் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
புதுக்கோட்டை மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் நடைபெற்ற பேரணியில் செஞ்சிலுவைச் சங்கம், தேசிய மாணவர் படை, கல்லூரி மாணவ, மாணவிகள், சாரண, சாரணியர் இயக்கம், காவல் துறை, தொண்டு நிறுவனங்கள், சேவை அமைப்புகள் பங்கேற்றன.
பேரணியில் சென்றவர்கள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றதோடு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களையும் வழங்கினர்.
பேரணி அண்ணாசிலை, கீழராஜவீதி வழியாக டவுன்ஹாலை சென்றடைந்தது. இதில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ந. பாலகுருநாதன், வருவாய் கோட்டாட்சியர் சி. முத்துமாரி, வட்டாட்சியர் கா. ராஜேந்திரன், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக அலுவலர்கள் உள்ளிட்டோர் பேரணியில் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...