வீட்டிலிருந்து வேலை முறைக்கு மாறாதது ஏன்? ஸ்ரீதர் வேம்பு விளக்கம்கரப்பான்பூச்சி மக்கள் கட்சி! ஆயிரக்கணக்கில் இணையும் வேலையில்லா இளைஞர்கள்! மேற்கு வங்க மறுதேர்தல்: திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் விலகல்!பொருளாதாரப் புயல் வீசப்போகிறது.. மக்களை எச்சரிக்கும் ராகுல்!சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 19 புதிய நீதிபதிகள்! கொலிஜியம் ஒப்புதல்! பழவேற்காடு மீனவர் வலையில் மர்ம பொருள்!
/

தமிழில் எழுதப்பட்ட முதல் காவியம் சிலப்பதிகாரம்: பழ.கருப்பையா

தமிழில் எழுதப்பட்ட முதல் காவியம் சிலப்பதிகாரம் என்றார் பழ.கருப்பையா.

Updated On :29 ஜனவரி 2013, 9:34 am IST

தமிழில் எழுதப்பட்ட முதல் காவியம் சிலப்பதிகாரம் என்றார் பழ.கருப்பையா.
புதுக்கோட்டையில் இளங்கோவடிகள் இலக்கிய மன்றத்தின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற சிலப்பதிகார விழாவின் நிறைவுநாள் கருத்தரங்கில் பங்கேற்று மேலும் அவர் பேசியது:
தமிழ்க்காப்பியமான சிலப்பதிகாரம் தமிழர்களில் வாழ்க்கை முறை அரசியல் முறையைசித்திரிக்கும் அருங்காப்பியமாகும். ஆங்கில இலக்கியத்தில் ஷேக்ஸ்பியர் தனது கருத்தை நாடக மாந்தர் மூலமாக வெளிப்படுத்தும் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும் ஆனால் அவரது காலத்திற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே சிலப்பதிகாரத்தில் இந்த யுக்தியை கடைப்பிடித்தவர் இளங்கோவடிகள். கண்ணகியின் இன்னல்களுக்கு காரணம் அவள் நோன்பு இருக்காததன் காரணம் என்று கண்ணகியிடம் அவள் தோழி மாதுரி சொல்லும் போது வினையை அனுபவித்துத்தான் தீர்க்க முடியுமே தவிர வழிபட்டல்ல என்ற கருத்தை இளங்கோவடிகள் வெளிப்படுத்துகிறார்.சிலப்பதிகார காலத்தில் சத்திரியர்,சூத்திரர், வணிகர், தாழ்த்தப்பட்ட மக்கள் என பல குல மக்கள் வாழ்ந்த காலமாகும்.
வணிககுலத்தை சேர்ந்த கண்ணகி அங்கு பத்தினி தெய்வமாகவும், அந்த தெய்வத்துக்கு சத்திரியர் குலத்தை சேர்ந்தவர் பூசாரியாகவும் சேவையாற்றுகிறார். இவ்வாறு சிலப்பதிகாரம்
முழுமைக்குமே சாதிகளை கடந்து ஏற்றத் தாழ்வுகளைக் களைந்து நியாயத்தையும், சமத்துவத்தையும் நிலைநாட்டும் காப்பியமாக திகழ்கிறது. குழந்தைகள் பெற்றோர்களிடம் மட்டுமே இயற்கையான அறிவைப் பெறுகின்றன. அது போல காலங்களை கடந்து தமிழ் இயற்கையாக வாழ்வதற்கு காரணம் அதன் தனிச் சிறப்புதான். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ஒருவர் பேசும் தமிழை மற்றவர்கள் புரிந்து கொள்ள முடியும் என்றார் பழ. கருப்பையா.
கருத்தரங்கில் முனைவர் அரிமழம் பத்மநாபன், புதுச்சேரி பாரதிதாசன் மகளிர் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் சொ. சேதுபதி, சிவகங்கை மன்னர் துரைசிங்கம் கல்லூரி பேராசிரியர் மு. பழனியப்பன், காரைக்குடி ராமநாதன் ஆகியோர் பேசினர்.

முதல்நாள் நடந்த தொடக்க விழாவிற்கு வானொலி பண்பலை நிகழ்ச்சி அமைப்பாளர் சுந்தர
ஆவுடையப்பன் தலைமை வகித்தார். மன்றத் துணைத் தலைவர் சுப்பிரமணிய காடு வெட்டியார் வரவேற்றார். துணைத்தலைவர் புலவர் மலையப்பன் மன்றக் கொள்கைகளை விளக்கிப் பேசினார். முதன்மை கல்வி அலுவலர் அருள் முருகன் பரிசுகள் வழங்கினார். வர்த்தகர் சங்க தலைவர் சீனு.சின்னப்பா தலைமையில் நல்லாசிரியர் பொன்.கருப்பையா இயக்கிய சிலம்பின் சிலிர்ப்பு நாடகம் நடைபெற்றது. இரண்டாம் நாள் நிறைவு விழாவுக்கு மன்றத் தலைவர் முரு. வைரமாணிக்கம் தலைமை வகித்தார். பொருளர் மு. ராமுக்கண்ணு வரவேற்றார். இணைச் செயலர் திருப்பதி நிகழ்ச்சிகளை தொகுத்தளித்தார். துணைச் செயலர் ந. புண்ணியமூர்த்தி நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.