மும்பை: ரூபாயின் மதிப்பு புதிய வரலாற்றுச் சரிவை எட்டியது குறித்த கவலைகள் எழுந்ததாலும், வர்த்தக நேரத்தின் இறுதியில் எச்.டி.எஃப்.சி. வங்கி மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய முன்னணி நிறுவனப் பங்குகளின் விற்பனை அதிகரித்ததாலும், பங்குச் சந்தை இன்று சரிவுடன் நிறைவுபெற்றது.
நிச்சயமற்ற சூழலுக்கு மத்தியில், சர்வதேச அளவில், கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது வருவதும், பங்குச் சந்தையின் வர்த்தகத்தை முற்றிலும் மாற்றி அமைத்தது. இதற்கிடையில், சந்தை வர்த்தக நேரத்தின் போது ஈட்டிய அனைத்து ஆதாயங்களையும் இழந்து சரிவுடன் நிறைவடைந்தது.
30 பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் 114.19 புள்ளிகள் சரிந்து, 75,200.85 புள்ளிகளாகவும், 50 பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 31.95 புள்ளிகள் சரிந்து, 23,618 புள்ளிகளாக நிலைபெற்றது.
கத்தார், சௌதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் கோரிக்கையை ஏற்று ஈரான் மீதான புதிய தாக்குதல்களை நிறுத்திவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். மேலும், தெஹ்ரானுடன் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு ஒப்பந்தத்திற்கு வழிவகுக்கும் வகையிலான தீவிரப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்ததையடுத்து, சென்செக்ஸ் 431.23 புள்ளிகள் உயர்ந்து 75,746.27 புள்ளிகளை எட்டியது.
சென்செக்ஸில் கோடக் மஹிந்திரா வங்கி, அல்ட்ராடெக் சிமெண்ட், டைட்டன், அதானி போர்ட்ஸ், பார்தி ஏர்டெல் மற்றும் சன் பார்மா உள்ளிட்ட பங்குகள் சரிந்தும மறுபுறம் இன்போசிஸ், எச்சிஎல் டெக், டெக் மஹிந்திரா, எட்டர்னல் மற்றும் டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தன.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, இன்றைய வர்த்தகத்தில் (செவ்வாய்க்கிழமை) ரூ. 96.60 என்ற புதிய வரலாற்றுச் சரிவை எட்டியது. பிறகான வர்த்தக நேர இறுதியில் ரூ. 96.52 என்ற அளவில் நிலைபெற்றது.
பங்குச் சந்தையின் தரவுகளின் அடிப்படையில், அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (திங்கள்கிழமை) 2,813.69 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர்.
நியூயார்க்கில் நடைபெற்று வந்த, பத்திரங்கள் மற்றும் இணைய மோசடி தொடர்பான இந்த முக்கியத்துவம் வாய்ந்த வழக்கில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, வணிகப் பெரும்புள்ளியான கௌதம் அதானி மற்றும் அவரது மருமகன் சாகர் ஆகியோர் மீதான அனைத்துக் குற்றவியல் வழக்குகளையும் அமெரிக்க நீதித்துறை நிரந்தரமாக ரத்து செய்தது முடித்துவைக்கப்பட்டது. இதன் விளைவாக, அதானி குழுமத்தைச் சேர்ந்த பெரும்பாலான நிறுவனப் பங்குகளின் விலை உயர்வுடன் நிறைவுபெற்றது.
ஆசிய சந்தைகளில், தென் கொரியாவின் முக்கிய குறியீடான கோஸ்பி மற்றும் ஜப்பானின் நிக்கெய் 225 குறியீடுகள் சரிவுடன் முடிவடைந்தன. அதே நேரத்தில் ஷாங்காயின் காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹேங் செங் குறியீடுகள் உயர்வுடன் நிலைபெற்றன.
ஐரோப்பிய சந்தைகள் உயர்வுடன் வர்த்தகமானது. நேற்று (திங்கள்கிழமை) அமெரிக்க சந்தைகள் கலவையான போக்கில் முடிவடைந்தன.
இந்திய ரூபாயின் தொடர் சரிவும், தொடர்ந்து உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலை மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ள நிலையில், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை, 1.80 சதவீதம் சரிந்து, பேரல் ஒன்றுக்கு 110 அமெரிக்க டாலர் என்ற அளவில் வர்த்தகமானது.
Summary
Stock market benchmark indices ended lower on Tuesday due to selling in blue-chip stocks.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐடி பங்குகள் ஏற்றம் எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!

சரிந்து, மீண்டு பிறகு சரிந்த பங்குச் சந்தை: ஐடி, ஆட்டோ பங்குகள் உயர்வு!!

ஈரான் பதற்றம் எதிரொலி: பங்குச் சந்தை கடும் வீழ்ச்சி, எண்ணெய் விலை தொடர் உயர்வு!







