புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்டத்தில் நான்கு கட்டமாக நடந்து முடிந்த கூட்டுறவு சங்கத்தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் அனைவரும் 9.5.2013 -ல் பதவி ஏற்க வேண்டுமென தமிழக அரசு அறிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்றுக் கொண்டனர். அதன் தொடர்ச்சியாக அன்னவாசல் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிக்கு தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகள் 11 பேரில், அதிமுக முன்னாள் மாவட்டச் செயலர் வீ. ராமசாமி தலைவராகவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு உறுப்பினர் கே.ஆர். தர்மராஜன் துணைத் தலைவராகவும் பதவியேற்றனர். இதில், வங்கியின் செயல் ஆட்சியர் அசோக்குமார், செயலர் நடராஜன், எழுத்தர் பழனிச்சாமி, இயக்குநர்கள் சோமையா, எழுவன், சஞ்சய்காந்தி, சிதம்பரம், கமலநாதன், பானுமதி, கீதா, கயல்விழி, வெüóளைச்சாமி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
அரசு கல்வித்துறை பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணயச் சங்கம்: இச்சங்கத்தின் புதிய தலைவராக மு. மாரிமுத்து துணைத் தலைவராக வி.எஸ். பிச்சைவேல் மற்றும் இயக்குநர்களாக பெ. சுரேஷ், க. கீதா, பா. பத்மாவதி, எஸ். சங்கரநாராயணன், நா. சிவயோகன் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
புதிய நிர்வாகிகளுக்கு மாவட்ட முன்னாள் முதன்மைக் கல்வி அலுவலர்கள்(திருவண்ணாமலை) ரெ. பரமசிவம், (தூத்துக்குடி) விஜயன், நிர்வாகிகள் என். சுப்பாராவ், அழகன், அழகேசன், கே. சுப்பன், செந்தூரான் கல்வி நிறுவனங்களின் செயல் அலுவலர் எஸ். கார்த்திக், சாரணர் இயக்க முன்னாள் மாவட்டச் செயலர் வே. குணசீலன் உள்ளிட்டோர் வாழ்த்தினர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கம்: இச்சங்கத்தின் புதிய தலைவராக அண்ணா தொழில் சங்க மண்டலச் செயலர் எஸ். சோமசுந்தரம், துணைத் தலைவராக கே. மாசிலாமணி ஆகியோர் பதவியேற்றனர்.
மாவட்ட கூட்டுறவுத் துறை அலுவலர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கம்: இச்சங்கத்தின் புதிய தலைவராக த. பாண்டித்துரை, துணைத் தலைவராக சந்திரசேகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பதவியேற்றுக் கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாழை - 2 படத்திற்கு இசையமைக்கும் இளையராஜா?

பக்ரீத் பண்டிகை: மாடு, ஒட்டக இறைச்சி விற்பனைக்கு கடும் கட்டுப்பாடு!

பணக்காரர்கள் பணக்காரர்களாகவும் ஏழைகள் ஏழைகளாகவும் இருப்பதே பாஜகவின் கொள்கை: கார்கே
தமிழகத்தில் சாதனை வசூலைச் செய்த கருப்பு!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


