புதுக்கோட்டையில் சிலப்பதிகார விழா
புதுக்கோட்டை இளங்கோவடிகள் இலக்கிய மன்றம் சார்பில், சிலப்பதிகார விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை இளங்கோவடிகள் இலக்கிய மன்றம் சார்பில், சிலப்பதிகார விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை நகர்மன்றத்தில் நடைபெற்ற விழாவுக்கு இளங்கோவடிகள் இலக்கிய மன்றத் தலைவர் முரு. வைரமாணிக்கம் தலைமையுரையாற்றினார்.
தமிழ் வளர்ச்சி இயக்ககத்தின் முன்னாள் தலைவர் முனைவர் சிலம்பொலி செல்லப்பன் பங்கேற்று, விழாவைத் தொடக்கி வைத்துப் பேசியது:
சிலப்பதிகாரம் சமய ஒற்றுமையை வலியுறுத்தும் காப்பியமாகும். அது தமிழ் விழுமியங்களை தற்காலத் தலைமுறைக்கு கொண்டு செல்லும் முதன்மைக் காப்பியமாகவும் திகழ்கிறது.
சிலப்பதிகாரத்தின் புகழைப் பரப்புவதில் புதுக்கோட்டை இளங்கோவடிகள் இலக்கிய மன்றத்தின் பணிகள் சிறப்பானது என்றால் அது மிகையில்லை என்றார்.
தொடர்ந்து, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சி. சுந்தரமூர்த்தி தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில், இளங்கோவடிகள் இலக்கிய மன்றத் துணைத் தலைவர் தி.சு. மலையப்பன் அறிமுகவுரையாற்றினார். பாலக்காடு தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு மைய இயக்குநர் கே.ஏ. ராஜாராமன் தெய்வத்துள் வைக்கப்படும் எனும் தலைப்பிலும், சென்னை, தாகூர் கலை அறிவியல் கல்லூரியின் முன்னாள் முதல்வர் தி. ராஜகோபால் சிலம்பில் எச்சரிக்கை எனும் தலைப்பிலும், பொதிகை தொலைக்காட்சி துணை இயக்குநர் பாலமுரளி, சிலம்பில் பண்பாடு எனும் தலைப்பிலும் கருத்துரை ஆற்றினர்.
இளங்கோவடிகள் இலக்கிய மன்ற துணைத் தலைவர் ராம. சுப்பிரமணியக் காடுவெட்டியார் வரவேற்றார். மருத்துவர் ச. ராமதாஸ் முன்னிலை வகித்தார். இளங்கோவடிகள் இலக்கிய மன்றத் துணைச் செயலர் புண்ணியமூர்த்தி நன்றி கூறினார்.
இதையடுத்து, பிற்பகலில் உலகத் திருக்குறள் பேரவை மாவட்டத் தலைவர் சண்முக பழனியப்பன் முன்னிலையில் நடைபெற்ற ஆய்வரங்கில், திருவாடானை அரசு கலைக் கல்லூரி தமிழ்த் துறைத் தலைவர் மு. பழனியப்பன், புதுகை புலவர் கு.ம. திருப்பதி ஆகியோர் உரை நிகழ்த்தினர்.
முன்னதாக, இளங்கோவடிகள் இலக்கிய மன்றப் பொருளாளர் மு. ராமுக்கண்ணு வரவேற்றார். இதையொட்டி, காரைக்குடி கலைக்கோவில் நாட்டியப் பள்ளி மாணவிகளின் நாட்டியச் சிலம்பு எனும் பரத நாட்டிய நாடகம் நடைபெற்றது. தொடர்ந்து, பேச்சு, கட்டுரைப் போட்டிகளில் வென்ற பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
இளங்கோவடிகள் இலக்கிய மன்றச் செயலர் மா. நாகூர் நன்றி கூறினார். முன்னதாக, சிலம்பொலி செல்லப்பன் தொடங்கியுள்ள இளங்கோவடிகள் அறக்கட்டளையின் வளர்ச்சிக்கு புதுகை இளங்கோவடிகள் இலக்கிய மன்றம் சார்பில் ரூ. 25 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை விழாக் குழு நிர்வாகிகள், கு. சுப்பிரமணியன், சு. துரைக்குமரன், புலவர் மகா. சுந்தர், ஆர். சேவியர், அ.லெ. சொக்கலிங்கம், ஜி.எஸ். தனபதி, சந்திரா ரவீந்திரன், வள்ளியம்மை சுப்பிரமணியன், குமரசாமி, லட்சுமணன் ஆகியோர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

