அரசுப் பணியாளர்களுக்கான மாநில மேசை பந்துப்போட்டி: புதுகை மூன்றாமிடம்
அரசுப் பணியாளர்களுக்கு இடையே மாநில அளவில் நடைபெற்ற மேசை பந்துப் போட்டியில் புதுக்கோட்டை மாவட்ட அணியினர் மூன்றாம் பரிசை வென்றுள்ளனர்.
அரசுப் பணியாளர்களுக்கு இடையே மாநில அளவில் நடைபெற்ற மேசை பந்துப் போட்டியில் புதுக்கோட்டை மாவட்ட அணியினர் மூன்றாம் பரிசை வென்றுள்ளனர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் அரசுப் பணியாளர்களுக்கான மாநில அளவிலான மேசை பந்து விளையாட்டுப் போட்டிகள் சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் 10.9.2015 முதல் 12.9.2015 வரை 3 நாள்கள் நடைபெற்றது. இதில் தமிழகத்திலுள்ள 14 மாவட்டங்களைச் சேர்ந்த அரசுப் பணியாளர்களைக் கொண்ட அணிகள் பங்கேற்றன.
அதில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பணியாளர்கள் கு. மனோகரன், எஸ். முகமதுரபீ, உடற்கல்வி ஆசிரியர் எஸ். சுப்புராமன், முதுகலை ஆசிரியர்கள் இரா. சரவணன், து. இன்பராஜ் ஆகியோரைக் கொண்ட அணியினர் கலந்துகொண்டு மாநில அளவில் மூன்றாம் பரிசை வென்றுள்ளனர்.இதையடுத்து, மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், புதுக்கோட்டை மாவட்ட அரசுப் பணியாளர்கள் அணியினருக்கு ஆட்சியர் சு. கணேஷ் நேரில் வாழ்த்துத் தெரிவித்தார். இதில், மாவட்ட விளையாட்டு அலுவலர் எஸ். வாஞ்சிநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

