கார்த்திகை தீபத்திருநாளுக்காக பல்வேறு வடிவங்களில் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மண்பாண்டத் தொழிலாளர்கள் தங்களது தொழிலை மேம்படுத்த அரசின் உதவியை எதிர்பார்க்கின்றனர்.
புதுக்கோட்டை- அரிமளம் சாலையில் உள்ள குசலாக்குடி கிராமத்தில் வசிக்கும் மக்கள் காலங்காலமாக மண்பாண்டம் தயாரிக்கும் தொழிலை செய்து வருகின்றனர். விழாக் காலங்களில் பக்தர்களால் பயன்படுத்தப்படும் உருவச்சிலைகளையும், அகல் விளக்குகளையும் இவர்கள் குடிசைத் தொழிலாகச் செய்து வருகின்றனர்.
மேலும், பொங்கல் பானைகளோடு, பாரம்பரிய மண் பாத்திரங்களான சோற்றுப்பானை, குழம்புச்சட்டிகள், குடிநீர்த் தொட்டிகள், பானைகள், நெற்குதிர் போன்றவற்றையும் தேவைக்கேற்ப தயாரித்து வருகின்றனர்.
ஆனால், இதற்குத் தேவையான மூலப்பொருளான களிமண் தரமானதாகக் கிடைக்காத நிலையில், அரசு உதவிகளும் போதிய அளவு கிடைக்காததால், பல்வேறு சிரமங்களுக்கு இடையே இத்தொழிலை அவர்கள் மேற்கொண்டு வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
வரும் 12 ஆம் தேதி கார்த்திகை தீபத்திருநாளையொட்டி, அகல் விளக்குகள் தயாரிக்கும் பணியில் குடும்பத்துடன் ஈடுபட்டுள்ள குசலாக்குடியைச் சேர்ந்த மண்பாண்டத் தொழிலாளர் செ. ராமன் இதுகுறித்து கூறியது: மாவட்டம் முழுவதும் ஏறத்தாழ சுமார் 10 ஆயிரம் பேர் மண்பாண்டத் தொழிலைச் செய்து வருகின்றனர். எங்களது குடும்பம் பரம்பரை பரம்பரையாக இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருகிறது. உழைப்பையும், நேரத்தையும் அதிகமாக எடுத்துக்கொள்ளும் தொழில் இது. 1000 அகல் விளக்குகள் (சிறியது) கொண்ட மூட்டையை மொத்த வியாபாரிகளிடம் ரூ. 500-க்கு விற்கிறோம். இங்கு தயாரிக்கும் அகல்விளக்குகள் தேவக்கோட்டை, காரைக்குடி, புதுக்கோட்டை, மதுரை, திருச்சி போன்ற ஊர்களுக்கு அனுப்பப்படுகிறது.
கைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் அளிப்பதைப் போல, மண்பாண்டத் தொழிலுக்கும் அரசு சலுகை வழங்க முன்வர வேண்டும். இடம் இல்லாதவர்களுக்கு தொழில் செய்யும் இடத்தையும், அதற்கான கொட்டகையையும் அமைத்துத்தர வேண்டும்.
மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு என கூட்டுறவு சங்கத்தை உருவாக்க வேண்டும். தமிழக அரசின் மழைக்கால நிவாரணம் கேட்டு விண்ணப்பித்துள்ள 1400 பேரில், 452 பேருக்கு மட்டுமே உதவி கிடைத்துள்ளது. விண்ணப்பித்த அனைவருக்கும் நிவாரண உதவி அளிக்க வேண்டும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மீஞ்சூர் சம்பவம்! வீட்டிற்குள் இருக்கும் குழந்தைகளுக்கே பாதுகாப்பில் - அண்ணாமலை

பெண் தற்கொலை! ரூ.8,000 கூப்பன் - மண்ணுளிப் பாம்பா? இரிடியமா? விஜய் கண்டனம்!

சென்னையில் விஜய் பிரசாரத்துக்கு பலத்த பாதுகாப்பு!
லெனின் பாண்டியன் டிரைலர்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

