அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளைஞர் சாவு
புதுகை மாவட்டம், ஆலங்குடி அருகே வியாழக்கிழமை இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் உயிரிழந்தார்.
புதுகை மாவட்டம், ஆலங்குடி அருகே வியாழக்கிழமை இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் உயிரிழந்தார்.
ஆலங்குடி அருகேயுள்ள ஆயிப்பட்டியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் ராஜேஷ் (28). கறம்பக்குடியில் வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் கடை நடத்தி வரும் இவர், வியாழக்கிழமை இரவு கறம்பக்குடியில் இருந்து ஆயிப்பட்டிக்கு மொபெட்டில் சென்றபோது, பாச்சிக்கோட்டை பிரிவு சாலை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ராஜேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆலங்குடி போலீஸார் விசாரணை மேற்கெண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




