
"கடின உழைப்பு,விடாமுயற்சி இருந்தால் எந்தத் துறையிலும் ஜெயிக்கலாம்'
கடின உழைப்பு,விடாமுயற்சி இருந்தால் எந்தத் துறையிலும் ஜெயிக்கலாம் என்றார் கபாடி விளையாட்டு வீரரும்,அர்ஜுனா விருது பெற்றவருமான வீரர் பி. கணேசன்.
கடின உழைப்பு,விடாமுயற்சி இருந்தால் எந்தத் துறையிலும் ஜெயிக்கலாம் என்றார் கபாடி விளையாட்டு வீரரும்,அர்ஜுனா விருது பெற்றவருமான வீரர் பி. கணேசன்.
புதுகை ஜெ.ஜெ. கலை,அறிவியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விளையாட்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு போட்டிகளில் வென்ற மாணவிகளுக்குப் பரிசளித்துப் பேசியது:
கல்வியால் மட்டும் ஒருவரது வாழ்க்கை முழுமை பெறாது. மனிதனின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு கல்வி,விளையாட்டு மற்றும் சமூகச் சிந்தனை அவசியம். எந்தத் துறையிலும் வெற்றி பெற விளையாட்டு உறுதுணையாக இருக்கும். உங்கள் பெற்றோரையும், ஆசிரியரையும் வணங்கினால் நீங்கள் நினைக்கிற காரியம் எளிதில் நிறைவேறும்.
வெற்றி என்பது எளிதில் கிடைப்பது அல்ல. வியர்வையில் நனைந்தவர்களால் தான், பலரும் வியக்கும் வகையில் உயர முடியும். அதனால் கடின உழைப்பும், விடாமுயற்சியும் இருந்தால் எவருமே சாதிக்க முடியும். விளையாட்டுத் துறை என்றல்ல, வேறு எந்தத் துறைக்கும் இதுவே அடிப்படை. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த என்னால் கடின உழைப்பு,விடாமுயற்சியுடன் உழைத்து விளையாட்டுத் துறையின் உயரிய விருதான அர்ஜுனா விருதைப் பெற முடிந்தது என்றால் உங்களாலும் முடியும். எனவே, உங்களது திறனை முறையாகப் பயன்படுத்தி சர்வதேச அளவில் சாதனைப் படைக்க வேண்டும் என்றார்.
அறங்காவலர் கவிதா சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.செயலர் நா. சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் உடற்கல்வி செயலர் பழனிச்சாமி வாழ்த்தினார். உடற்கல்வி இயக்குநர் மு. ஜெகதீஷ்பாபு ஆண்டறிக்கை வாசித்தார். முதல்வர் ஜ. பரசுராமன் வரவேற்றார். உடற்கல்வி இயக்குநர் ராமன் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






