சிவகாசியில் தயாரிக்கப்பட்ட கட்சி சின்னங்கள் மற்றும் கட்சி தொடர்பான பல்வேறு பொருள்கள் விற்பனை இல்லாததால் உற்பத்தியாளர்கள் கடும் சிரமத்தில் உள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பல்வேறு கட்சிகளின் கொடிகள் மற்றும் கட்சி சின்னங்கள் அச்சிடப்பட்ட பல்வேறு வகையான பொருள்கள் தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
தேர்தல் என்றாலே அரசியல் கட்சிகளின் கொடிதான். அரசியல் கட்சி தலைவர்களின் பொதுக்கூட்டங்கள் மற்றும் பிரசார இடங்களில் தோரணமாக தொங்கவிடப்பட்டிருக்கும். இந்த கொடிகள் அனைத்தும் பட்டாசு மற்றும் அச்சுத் தொழிலுக்கு பெயர்பெற்ற சிவகாசியில் தான் அச்சிடப்படுகிறது. தேர்தல் தேதி அறிவித்தவுடன்,அரசியல் கட்சியினர் சிவகாசிக்கு வந்து கொடிகள், தோரணங்கள் வாங்கி செல்வதுதான் இன்றளவும் வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில் எல்லா துறைகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை போல்,தேர்தல் களத்திலும் தங்கள் கொடியை,சின்னத்தை வித்தியாசமான முறையில் கொண்டுசேர்க்கவும்,அதே சமயத்தில் அது தொண்டர்களுக்கு பயனுள்ளதாகவும் இருக்கும் நோக்கில் சில அரசியல் கட்சிகள் கேட்டுக்கொண்டதன் பேரில், விதவிதமான வடிவங்களில் விசிறி,தொப்பி.கண்களில் வெயில் படாமல் இருக்க கேப்,மற்றும் பேட்ச், துண்டு,வேஷ்டி,சேலை,மப்ளர் ஆகியவற்றில் கூட அரசியல் கட்சிகளின் சின்னங்கள் பொறிக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளன. மேலும், தலைவரிகள் முகமூடியும் இங்கு தயாரிக்கப்படுகிறது. தமிழகம் மட்டுமின்றி கேரளம், புதுவை தேர்தல்களுக்கும் சிவகாசியில் அச்சிடப்பட்ட இப்பொருள்களை, அங்குள்ள அரசியல் கட்சியினர் வந்து வாங்கி செல்கின்றனர். இந்த தொழிலை நம்பி பல குடும்பங்கள் சிவகாசி பகுதியில் வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து சிவகாசியை சேர்ந்த கட்சி கொடிகள் மற்றும் தேர்தல் தொடர்பான பொருள்கள் உற்பத்தி செய்யும் காசிராஜன் கூறியது: தேர்தல் கமிஷன் கெடுபிடியின் காரணமாக கேரளம், புதுவையைச் சேர்ந்த வெளி மாநில வியாபாரிகள் தேர்தல் தொடர்பான சின்னங்கள் பொறித்த பொருள்களை வாங்க சிவகாசி வருவது மிகவும் குறைந்து விட்டது. ஏற்கனவே, தயாரிக்கப்பட்ட தேர்தல் தொடர்பான பொருள்கள் விற்பனையும் மந்தமாக உள்ளது. தேர்தல் நேரங்களில் மட்டுமே இது போன்ற பொருள்கள் அதிகம் உற்பத்தி செய்வோம். விற்பனை இல்லாததால் முதலுக்கே மோசமான நிலை ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு: தமிழகத்தில் 18 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை!

ராமேஸ்வரம் கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா!

ஜன சங்க நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜி நினைவு நாள்: பிரதமர் மோடி அஞ்சலி!

கத்தார் எரிவாயு ஆலையில் வெடிவிபத்து: தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் பலி!
விடியோக்கள்

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |



