அறந்தாங்கியில் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்
அறந்தாங்கி நகராட்சிப் பகுதிகளில் வியாழக்கிழமை நடைபெற்ற சோதனையில் தடை செய்யப்பட்ட ரூ. 2 லட்சம் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


அறந்தாங்கி நகராட்சிப் பகுதிகளில் வியாழக்கிழமை நடைபெற்ற சோதனையில் தடை செய்யப்பட்ட ரூ. 2 லட்சம் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அறந்தாங்கி நகராட்சி ஆணையர் பே.வே.நவேந்திரன் தலைமையில் சுகாதார அலுவலர் தி. முத்துகணேஷ், சுகாதார ஆய்வாளர் எஸ்.சேகர்,
வருவாய் ஆய்வாளர் எஸ். செல்வராஜ், வருவாய் கண்காணிப்பாளர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் என சுமார் 130 பேரைக் கொண்ட 7 குழுக்கள் நகரில் உள்ள சுமார் 2,800 வணிக நிறுவனங்களில் சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனையின் போது 50 மைக்ரான் அளவுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பைகள், கப்புகள் மற்றும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் என ரூ.2 லட்சம் மதிப்புள்ளவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அவற்றைப் பயன்படுத்திய வணிக நிறுவனங்களுக்கு ஆயிரம், ரூ.500 வீதம் மொத்தம் ரூ.50 ஆயிரத்து 500 அபராதமாகப் பெறப்பட்டது.
இதுகுறித்து நகராட்சி ஆணையர் பே.வே. நவேந்திரன் கூறியது: இந்தச் சோதனை இனி அடிக்கடி நடைபெறும். ஆகவே கடை வியாபாரிகள் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்ய வேண்டாம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...