மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

சைல்டுலைன் சார்பில் நிறுவனங்களில் குழந்தைத் தொழிலாளர்கள் ஆய்வு

சைல்டு லைன் (1098) சார்பில் குழந்தை தொழிலாளர், பிச்சை எடுக்கும் குழந்தைகள் ஆய்வு மற்றும் குழந்தைகளுக்கு ராக்கி அணிவிக்கும்  நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :16 நவம்பர் 2017, 8:28 pm

DIN

சைல்டு லைன் (1098) சார்பில் குழந்தை தொழிலாளர், பிச்சை எடுக்கும் குழந்தைகள் ஆய்வு மற்றும் குழந்தைகளுக்கு ராக்கி அணிவிக்கும்  நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை சைல்டுலைன் 1098-ன் மூலம் குழந்தைகள் தினம் வார விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு நிகழ்வாக வியாழக்கிழமை புதுக்கோட்டை சைல்டுலைன் 1098 மாவட்ட ஒருங்கிணைப்பாளர்ஆ. ஜோதிராஜ் தலைமையில் சைல்டுலைன் 1098 பணியாளர்கள் லூர்து மேரி, அருணா, பபியோலோ மேரி, அருள்மேரி,  ஜாக்குலின், கிறிஸ்டினா, அருள் வினித், குழந்தை கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலர் வைரம், ஆள் கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலர்  அழகிரிராஜ், தொழிலாளர் நல ஆய்வாளர் குணசீலன் ஆகியோர் புதிய பேருந்து நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின்போது, பிச்சை எடுத்துவந்த 2 குழந்தைகள், ஜோசியம் பார்த்துவந்த 2 குழந்தைகளைக் கண்டறிந்து குழந்தைகள் நலக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டனர். தொடர்ந்து அவர்களின் பெற்றோரை வரவழைத்து ஆற்றுப்படுத்தி தொடர்ந்து குழந்தைகளை படிக்க வைக்குமாறு உறுதி எழுதி வாங்கி அனுப்பி வைக்கப்பட்டனர். பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள், பேருந்துகளில் சைல்டுலைன் -1098  குறித்த விழிப்புணர்வு வில்லைகள் ஒட்டப்பட்டது.
 தொடர்ந்து சத்தியமூர்த்தி நகர் உண்டு உறைவிடப்பள்ளி மாணவர்களுக்கு அரசு துறை சார்ந்த அலுவலர்கள்  ராக்கி அணிவித்து குழந்தைகள் தின வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். 
இதில், மாவட்ட நன்னத்தை அலுவலர்  கணேசன், குழந்தைகள் நல குழு உறுப்பினர்  ராக்கேல் ஜெயா, கலந்து கொண்டனர். புதுகை பல்நோக்கு சமூக சேவை அமைப்பின் நிர்வாக அலுவலர் எஸ். மத்தியாஸ்  வரவேற்றார். சைல்டுலைன் 1098 மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆ. ஜோதிராஜ் நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.