கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

திருவரங்குளம் ஒன்றியத்தில்  வளர்ச்சிப் பணிகள் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்றுவரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை ஆட்சியர் சு. கணேஷ் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

News image
Updated On :16 நவம்பர் 2017, 8:30 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்றுவரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை ஆட்சியர் சு. கணேஷ் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
ஆலங்குடி அருகேயுள்ள தோப்புக்கொல்லை இலங்கை அகதிகள் முகாமில்  சுகாதாரம் குறித்து ஆய்வு மேற்கொண்டு பின்னர், அப்பகுதியில் உடனடியாக கழிவுநீர் கால்வாய் அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து,திருவரங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுகாதாரத் துறையின் சார்பில் நடைபெற்ற டெங்கு விழிப்புணர்வு முகாமில் பங்கேற்றார்.
பின்னர்,  கோவிலூர்  ஊராட்சி தேவஸ்தானம் கிராமத்தில் உள்ள பெருங்குளத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணியாளர்களுடன் இணைந்து பனைமர விதைகளை நட்டார்.
வேப்பங்குடி ஊராட்சியில் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட தடுப்பணைகளை ஆய்வு செய்தார். மேலும், வேப்பங்குடி கண்மாயில் மரப்போத்து நடும் பணிகளை தொடங்கி வைத்தார். இம்மானம்பட்டி கிராமத்தில் ஒருங்கிணைந்த பள்ளிகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.11.80 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 2 வகுப்பறைக் கட்டடங்களையும், திருக்கட்டளை ஊராட்சியில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும் ஊராட்சி அலுவலக கட்டுமானப்பணி,திருவரங்குளம் வம்பன் காலனி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்கள் கல்வித்திறன், வழங்கப்படும் சத்துணவு குறித்தும் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
 ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர் ஜானகிராமன், வட்டாட்சியர் ராஜேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.