புதுக்கோட்டை மாவட்டத்தில் இருவேறு இடங்களில் மூடப்பட்ட மதுக்கடைகளை மீண்டும் திறக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியினர் வியாழக்கிழமை ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் புலிவலம் ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனு: எங்கள் பகுதியில் மதுக்கடை திறக்கப்பட்டுள்ளதால், அவ்வழியே செல்லும் மாணவிகள், பெண்கள் சிரமத்துடன் சென்று வருகின்றனர்.
எனவே, எங்கள் பகுதியில் உள்ள மதுக்கடையை அகற்ற மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளனர்.
ஆலங்குடி தாலுகா, வடகாடு பொதுமக்கள்: வடகாடு பகுதியில் இருந்த மதுக்கடைகள் கடந்த சில மாதங்களுக்கு முன் உச்சநீதிமன்ற உத்தரவின் படி மூடப்பட்டது.
ஆனால், வடகாடு பகுதியில் தனியார் கட்டடத்தில் 24 மணிநேரமும் மது விற்பனை நடைபெறுகிறது .
மேலும் வடகாடு பகுதியில் மதுக்கடை திறக்கும் முயற்சியை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டுமென அதில் குறிப்பிட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.