மக்கள் தொடர்பு முகாமில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு
புதுக்கோட்டை வட்டம், புத்தாம்பூர் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 113 பயனாளிகளுக்கு ரூ.13.55 லட்சத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் அளிக்கப்பட்டது.


புதுக்கோட்டை வட்டம், புத்தாம்பூர் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 113 பயனாளிகளுக்கு ரூ.13.55 லட்சத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் அளிக்கப்பட்டது.
முகாமுக்கு தலைமை வகித்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் பேசியது:
இந்த முகாமில் பல்வேறு துறைகளின் கீழ் பயனாளிகள் என மொத்தம் 113 பயனாளிகளுக்கு ரூ.13,55,690 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் அளிக்கப்பட்டது.
மேலும் ஆதனக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு மருத்துவ முகாமில் 165 புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதுடன், பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த கால்நடை மருத்துவ முகாமில் உள்ள 465 கால்நடைகளுக்கு பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.
இதில், மாவட்ட வருவாய் அலுவலர் அ.ராமசாமி, சார் ஆட்சியர் கே.எம்.சரயு, வேளாண் இணை இயக்குநர் ராஜகோபால், தாட்கோ மேலாளர் கோபால், வட்டாட்சியர் அ.செந்தமிழ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...