திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

அறந்தாங்கி அருகே  வீட்டின் பூட்டை உடைத்து8 பவுன் நகை, ரூ. 6 ஆயிரம் திருட்டு

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே  திங்கள்கிழமை அதிகாலை வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ரு. 6 ஆயிரம் பணம், பெண்ணிடம்

Updated On :18 ஏப்ரல் 2018, 9:27 am IST

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே  திங்கள்கிழமை அதிகாலை வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ரு. 6 ஆயிரம் பணம், பெண்ணிடம் இருந்து 8 பவுன் தங்கச் செயின் ஆகியவற்றை மர்மநபர் திருடியுள்ளார். 
அறந்தாங்கி  அருகே  காரணியேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் குத்புதீன். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஜெய்லா பீவி (45) மகன் , மருமகள் மற்றும் பேரக் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.  இந்நிலையில், திங்கள்கிழமை அதிகாலை வீட்டில் மின்தடை ஏற்பட்டபோது, ஏதோ சப்தம் கேட்டதையடுத்து, ஜெய்லா பீவி எழுந்து வந்து பார்த்தாராம். அப்போது, கதவின் பின்புறம் மறைந்திருந்த மர்மநபர், அவர் அணிந்திருந்த 8 பவுன் தங்கச்சங்கிலியை  அறுத்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டார். அவரது அலறல் கேட்டு எழுந்து வந்த மற்றவர்கள், வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த ரூ. 6 ஆயிரம் ரொக்கம் திருட்டு போயிருப்பதும் கண்டு அதிர்ச்சியடைந்தனர். 
இதையடுத்து, ஜெய்லாபீவி அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.