நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

இறப்புச் சான்றிதழ் வழங்காததால் மருத்துவமனை முன்பு தர்னா

தாயின் இறப்புச் சான்றிதழை வழங்காததைக் கண்டித்து, புதுகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு அவரது மகன், உறவினர்கள்

Updated On :18 ஏப்ரல் 2018, 9:25 am IST

தாயின் இறப்புச் சான்றிதழை வழங்காததைக் கண்டித்து, புதுகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு அவரது மகன், உறவினர்கள் செவ்வாய்க்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர்.புதுகை ஜீவா நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். 
இவரது தாயார் சீதை. உடல்நலக்குறைவு காரணமாக புதுகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மார்ச் 29 ஆம் தேதி உயிரிழந்தார்.
இந்நிலையில்,வெங்கடேஷ், அவரது தாயின் இறப்பு சான்றிதழ் கோரி உரிய ஆவணங்களை மருத்துமனையில் கொடுத்துவிட்டாராம்.  இருப்பினும் இதுவரை அவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கப்படவில்லையாம்.இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மருத்துவமனைக்கு சென்ற  வெங்கடேஷ், இறப்பு  சான்றிதழ் வழங்கும்படி கேட்டு மருத்துவமனை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து மருத்துவமனை முன்பு அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக உறவினர்களும், அங்கிருந்த பொதுமக்களும் தர்னாவில் ஈடுபட்டனர்.   இதையடுத்து, தர்னாவில் ஈடுபட்டவர்களிடம் போலீஸார் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.