இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

மாவட்டத்தில் எம்ஜிஆர் நினைவு நாள் அனுசரிப்பு

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் நினைவு நாளையொட்டி திங்கள்கிழமை புதுக்கோட்டை- தஞ்சை சாலையில்

Updated On :25 டிசம்பர் 2018, 9:40 am IST

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் நினைவு நாளையொட்டி திங்கள்கிழமை புதுக்கோட்டை- தஞ்சை சாலையில் பிருந்தாவனம் பகுதியில் எம்ஜிஆரின் படத்துக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  
நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள்முன்னாள் எம்எல்ஏ கார்த்திக் தொண்டைமான், முன்னாள் நகர்மன்றத் தலைவர் ராஜசேகரன் உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர். 
அறந்தாங்கி:  அதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ., மு.ராஜநாயகம் தலைமையில் அறந்தாங்கி ஒன்றியச் செயலாளர் தெற்கு பி.எம்.பெரியசாமி, வடக்கு  சி.வேலாயுதம் உள்ளிட்டோர் அண்ணா சிலையிலிருந்து  மௌன ஊர்வலமாக வந்து மாலை அணிவித்து மரியாதை செய்தனர். 
அமமுக சார்பில் நகர செயலாளர் க.சிவசண்முகம் தலைமையில் அறந்தாங்கி சட்டப்பேரவை உறுப்பினரும், கட்சியின் மாநில அமைப்புச் செயலாளருமான இ.ஏ.இரத்தினசபாபதி  ஒன்றிய செயலாளர் தெற்கு த.செல்வராஜ், வடக்கு கே.ராஜ்குமார் உள்ளிட்டோர் வ.உ.சி திடலிலிருந்து ஊர்வலமாக வந்து எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். 
பொன்னமராவதி: பொன்னமராவதி அதிமுக கட்சி அலுவலகத்தில் ஒன்றியச் செயலர் ராம. பழனியாண்டி தலைமையிலும், பேருந்து நிலையம் முன்பு நகரச்செயலர் அ.தங்கப்பன் தலைமையிலும் எம்ஜிஆர் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதேபோல், கண்டியாநத்தம், க.புதுப்பட்டி, ஆலவயல், கொப்பனாபட்டி உள்ளிட்ட இடங்களிலும் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. 
கந்தர்வகோட்டை: பேருந்து நிலையம் முன்பு அதிமுக ஒன்றியச் செயலாளர் ஆர். ரெங்கராஜன் தலைமையில் மாவட்ட மாணவரணி செயலாளர் பு. பாண்டியன், நகரச் செயலாளர் என். ராமநாதன் ஆகியோர் எம்ஜிஆர் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.