ஆலங்குடி அருகே இரு சக்கர வாகனம் மீது கார் மோதியதில் இரு இளைஞர்கள் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர். இச்சம்பவத்துக்கு காரணமான ஓட்டுர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் 4 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே அணவயல் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் பிரகாஷ்(19), துலுக்கவிடுதி கிராமத்தைச் சேர்ந்த செல்லமுத்து மகன் பாலமுருகன்(24). இவர்கள் இருவரும் வடகாட்டுக்கு சென்றுவிட்டு இரு சக்கர வாகனத்தில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். மாங்காடு பூச்சிகடை பகுதியில் சென்ற போது, எதிரே வந்த கார், இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பிரகாஷ், பாலமுருகன் இருவரும் நிகழ்விடத்தில் உயிரிழந்தனர். காரில் வந்த தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே புனல்வாசலைச் சேர்ந்த இருவர் தப்பியோடி விட்டனர்.
இதையடுத்து, அங்கு திரண்ட இருவரது உறவினர்கள், கிராம மக்கள், கார் ஓட்டுநரை கைது செய்ய வலியுறுத்தி இருவரது சடலங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்துக்குச் சென்ற ஆலங்குடி வட்டாட்சியர் ரத்னாவதி, காவல் துணைக் கண்காணிப்பாளர் அப்துல் முத்தலிப் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மறியல் போராட்டம் காரணமாக ஆலங்குடி- பட்டுக்கோட்டை, பேராவூரணி சாலையில் சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசுப் பேருந்துகளில் மீண்டும் ‘தமிழ்நாடு’ சேர்ப்பு!

பேருந்து பயணத்தை செல்போனில் விடியோ எடுத்த முதல்வர் விஜய்!

எஃப்ஐஆர் எனப்படும் முதல் தகவல் அறிக்கை என்பது என்ன ?
பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


