கந்தர்வகோட்டை பேருந்துநிலையத்தில் தெருவோர கடை வியாபாரிகளுக்கு இடம் ஒதுக்கித் தர வேண்டும் என சங்கக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தெருவோர வியாபாரிகள் சங்கக் கூட்டம் சங்க அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் துணைத் தலைவர் தங்கப்பொண்ணு தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் எம்.என் ராமச்சந்திரன் சங்கத்தின் பணிகள் குறித்து பேசினார். கெளரவ தலைவர் எஸ்.ராசேந்திரன் கூட்டத்தை வழிநடத்தினர். சங்கத் தலைவர் ஜி.நாகராஜன் தெருவோர வியாபாரிகள் சங்கத்தின் ஒற்றுமை குறித்து பேசினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: கந்தர்வகோட்டை பேருந்துநிலைய கட்டுமானப்பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பேருந்துநிலையத்தில் சுற்றுசுவர் எடுத்து அரசு பேருந்துகளுக்கும், பயணிகளுக்கும் பாதுகாப்பளிக்க வேண்டும். பேருந்துநிலையத்தில் தெருவோர வியாபாரிகளுக்கு இடம் ஒதுக்கித் தரவேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், சங்கத்தின் செயலாளர் அரசப்பன், பொருளாளர் வடிவேல், ஜெயராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இறுதியாக காட்டுநாவல் கணேசன் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அமைச்சர் ஒதுக்கீடு எனக்கே தெரியாது: புதுவை முதல்வர் வேதனை | Puducherry |

நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறும் முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இன்றைய செய்திகள் ஜூலை 27 - நேரலை

இ20 மக்கள் கட்சிக்கு பெருகும் ஆதரவு! 3 லட்சத்தைக் கடந்த ஃபாலோவர்ஸ்!
விடியோக்கள்

அமைச்சர் ஒதுக்கீடு எனக்கே தெரியாது: புதுவை முதல்வர் வேதனை | Puducherry |


