எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

மக்கள் குறைதீர் கூட்டத்தில் ரூ.7.28 லட்சம் நலத்திட்ட உதவிகள்

புதுக்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் ரூ.7.28 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Updated On :26 ஜூன் 2018, 8:54 am IST

புதுக்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் ரூ.7.28 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் ஆட்சியர் சு.கணேஷ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து விலையில்லா வீட்டுமனைப் பட்டா,  பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, வங்கி கடன், பசுமைவீடு,  சாலைவசதி, குடிநீர்வசதி, முதியோர்  உதவித்தொகை, திருநங்கைகளுக்கான வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட  கோரிக்கைகள் தொடர்பாக 253 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
மேலும், முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினர், மாற்றுத்திறனாளிகளுக்கான  உதவித்தொகை என மொத்தம் 22 பயனாளிகளுக்கு ரூ.7.28 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. 
மாவட்ட வருவாய் அலுவலர் அ.ராமசாமி,  ஆட்சியரின் நேர்முக உதவியாளர் செந்தாமரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.