முற்றுகை போராட்டம்:  தையல் தொழிலாளர்கள் முடிவு

நலவாரியப் பணப்பயன்களை உடனடியாக வழங்க  வலியுறுத்தி மார்ச் 28-ல்  சென்னை அமைப்புசாரா நலவாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு 
Updated on
1 min read

நலவாரியப் பணப்பயன்களை உடனடியாக வழங்க  வலியுறுத்தி மார்ச் 28-ல்  சென்னை அமைப்புசாரா நலவாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக தையல் கலைஞர்கள் சம்மேளனம்  முடி செய்துள்ளது.
புதுக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்ற சம்மேளனத்தின்  மாநிலக் குழுக் கூட்டத்துக்கு அதன் தலைவர் கே. செல்லப்பன் தலைமை வகித்தார் .
கூட்டத்தில், கடந்த 3 கல்வியாண்டுகளாக நலவாரியப் பணப்பலன்கள் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது.  ஓய்வூதியம் கடந்த ஓராண்டாக  வழங்கவில்லை. மகப்பேறு, திருமணம், இயற்கை மற்றும் விபத்து மரணம் உள்ளிட்ட அனைத்துப் பணப்பயன்களும் ஆண்டுக்கணக்கில் நிலுவையில் உள்ளன. மேற்கண்ட நிலுவைகளை  தாமதமின்றி வழங்கக்கோரி சென்னை அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய அலுவலகம் முன் வரும் மார்ச் 28-ஆம் தேதி பெருந்திரள் முறையீடு, முற்றுகைப் போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.பொதுச் செயலர் ஆர். வேலுச்சாமி, பொருளாளர் எம். ஐடாஹெலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com