/

காதணி விழாவில் நகை திருடிய இளைஞர் கைது

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே காதணி விழாவில் நகை திருடிய இளைஞரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

Updated On :29 மார்ச் 2018, 2:07 am

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே காதணி விழாவில் நகை திருடிய இளைஞரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
 புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி(70). இவர், கறம்பக்குடி அருகேயுள்ள குலப்பெண்பட்டியில் நடைபெற்ற உறவினர் வீட்டு காதணி விழாவுக்கு சென்ற இவர், 3 பவுன் நகையை வைத்திருந்த தனது கைப்பையை அருகில் வைத்துவிட்டு சாப்பிட்டு கொண்டிருந்தாராம்.    
அப்போது,  அந்த பையை அருகில் சாப்பிட்டுக்கொண்டிருந்த இளைஞர்  எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிவிட்டாராம். இதுகுறித்த புகாரின்பேரில் கறம்பக்குடி போலீஸார்,  மண்டபத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவைக்கொண்டு, நகையை திருடிச்சென்ற குலப்பெண்பட்டியைச் சேர்ந்த சி.திருமேனி(35) என்பவரை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.