ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

விராலிமலை பகுதி கல்வி அலுவலகங்களில்  மாவட்ட  முதன்மைக் கல்வி அலுவலர் ஆய்வு

விராலிமலை வட்டார வள மையம்,  பகல்நேர பாதுகாப்பு மையம் மற்றும் உதவித் தொடக்கக் கல்வி அலுவலகம் ஆகிய இடங்களில் புதுக்கோட்டை

Updated On :29 மார்ச் 2018, 2:01 am

விராலிமலை வட்டார வள மையம்,  பகல்நேர பாதுகாப்பு மையம் மற்றும் உதவித் தொடக்கக் கல்வி அலுவலகம் ஆகிய இடங்களில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆர். வனஜா புதன்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில்,  விராலிமலையில் செயல்பட்டு வரும் வட்டார வள மையத்தை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆர். வனஜா முன்னறிவிப்பின்றி பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
முதலில் வட்டார வளமையத்தில் ஆசிரியர்களுக்கான பயிற்சி இடம்,  கழிப்பறை வசதி,  குடிநீர் வசதி,  வளாகத் தூய்மை ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு நடத்தி அறிவுரைகள் வழங்கினார். இதைத் தொடர்ந்து,  ஆசிரிய பயிற்றுநர்களின் நகர்வுப் பதிவேட்டினை பார்வையிட்டு சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அலைபேசியின் வாயிலாக தொடர்புகொண்டு வட்டார வளமைய மேற்பார்வையாளர் மற்றும் ஆசிரிய பயிற்றுநர்கள் நகர்வுப் பதிவேட்டில் குறிப்பிட்டபடி பள்ளிப்பார்வைக்கு சென்றிருக்கிறார்களா என ஆய்வு செய்தார்.
 பின்னர்,  மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான பகல்நேர பாதுகாப்பு மையத்தினை பார்வையிட்டு குழந்தைகளை உற்சாகப்படுத்தி,  மாற்றுத் திறன் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்தும்,  மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு சிறப்பாக பயிற்சி அளிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான  ஆசிரியை,  உதவியாளர் மற்றும் உடலியக்க நிபுணர் ஆகியோருக்கு  அறிவுரை வழங்கினார்.
ஆய்வின்போது,  அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட மாவட்ட உதவித்திட்ட ஒருங்கிணைப்பாளர் சி.பழனிவேலு உடன் இருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.