ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மணல் குவாரி திறக்க எதிர்ப்பு தெரிவித்து நாளை முதல் தொடர் போராட்டம்

அறந்தாங்கி அருகே அரசு மணல் குவாரி திறக்க எதிர்ப்பு தெரிவித்து புதன்கிழமை (மே 16) முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட கிராமக்கள் முடிவெடுத்துள்ளனர்.

News image
Updated On :14 மே 2018, 10:41 pm

DIN

அறந்தாங்கி அருகே அரசு மணல் குவாரி திறக்க எதிர்ப்பு தெரிவித்து புதன்கிழமை (மே 16) முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட கிராமக்கள் முடிவெடுத்துள்ளனர்.
அறந்தாங்கி தெற்கு வெள்ளாற்றில் உள்ள அழியாநிலை கிராமத்தில் அரசு மணல் குவாரிக்கு செல்ல சாலை அமைக்கப்பட்ட போது கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுதொடர்பாக , அழியாநிலை கிராம மக்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆலங்குடி சட்டப்பேரவை உறுப்பினர் சிவ.வீ.மெய்யநாதன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார். இங்குள்ள ஆற்றில் எஞ்சியிருக்கும் மணலை பாதுகாத்தால் மட்டுமே வரும் காலங்களில் குடிநீர் தட்டுபாட்டை போக்க முடியும். எனவே, புதிய மணல் குவாரி அமைக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி புதன்கிழமை முதல் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவதென முடிவு செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.