சித்தன்னவாசலில் திங்கள்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்து வந்த காளைகள் முட்டித் தள்ளியதில் 7 பேர் காயமடைந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே சித்தன்னவாசலில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகிறது. நிகழாண்டுக்கான போட்டியை மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சியர் சு.கணேஷ் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட 609 காளைகள், 155 மாடுபிடி வீரர்கள் கால்நடை மருத்துவக் குழுவினரின் பரிசோதனைக்குப் பிறகு அனுமதிக்கப்பட்டனர்.
வாடிவாசலில் இருந்து கோயில் காளைகள் முதலில் அவிழ்த்து விடப்பட்டன. தொடர்ந்து, உள்ளூர் காளைகளும், அதையடுத்து, திருச்சி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, கரூர், விராலிமலை, கீரனூர், இலுப்பூர், அன்னவாசல் என பல்வேறு பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன.
வாடிவாசலில் இருந்து சீறிப் பாய்ந்து வந்த காளைகள் முட்டித் தள்ளியதில் மாடுபிடி வீரர்கள் பழனிசாமி(20), நாகராஜ் (24), செல்வம் (22) உள்பட 7 பேர் காயமடைந்தனர். இவர்களுக்கு அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மருத்துவர்களின் முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு, மேல்சிகிச்சைக்கு புதுகை, திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
போட்டியில் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்கள், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு பல்வேறு பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராமநாதபுரத்தில் ரூ.1.36 லட்சம் பறிமுதல்

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தமிழ்ப் புத்தாண்டு பிறப்பு சிறப்பு வழிபாடு

கொடைக்கானலில் மாா்க்சிஸ்ட் கம்யூ. வேட்பாளா் பாண்டிக்கு ஆதரவாக நடிகை ரோகிணி பிரசாரம்

தொகுதி மறுவரையறையால் மக்களை சிதறடித்துவிடக் கூடாது: சீமான்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

