ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

கார் கவிழ்ந்த விபத்தில் அரசுப் பள்ளி ஆசிரியை சாவு

புதுக்கோட்டை அருகே கட்டுப்பாட்டை இழந்து கார் கவிழ்ந்ததில் அரசுப் பள்ளி ஆசிரியை ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

Updated On :21 மே 2018, 9:14 pm

புதுக்கோட்டை அருகே கட்டுப்பாட்டை இழந்து கார் கவிழ்ந்ததில் அரசுப் பள்ளி ஆசிரியை ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
நாமக்கல் மாவட்டம், நத்தம்மேடு பகுதியைச் சேர்ந்த தம்பதி எஸ்.மகேஷ்(36), ஷீலாவதி(31). அரசுப் பள்ளி ஆசிரியர்களான இவர்கள், தனது குழந்தைகள் தினேஷ்(4), விஷ்மிதா(1) ஆகியோருடன் தஞ்சை மாவட்டம் பேராவூரணிக்கு சென்று விட்டு காரில் நாமக்கல் புறப்பட்டனர். காரை மகேஷ் ஓட்டினார். புதுக்கோட்டை அருகே கட்டியாவயல் பகுதியில் சென்ற போது டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், காயமடைந்த ஷீலாவதி நிகழ்விடத்தில் உயிரிழந்தார். காயமடைந்த மகேஷ், தினேஷ், விஷ்மிதா மூவரும் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து திருக்கோகர்ணம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.