மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கோயில் திருவிழா விவகாரம்: மறியலில் ஈடுபட்ட 65 பேர் கைது

ஆலங்குடி அருகே முத்துமாரியம்மன் கோயில் திருவிழா தொடர்பாக மறியலில் ஈடுபட்ட 65 பேர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

Updated On :21 மே 2018, 1:49 am

ஆலங்குடி அருகே முத்துமாரியம்மன் கோயில் திருவிழா தொடர்பாக மறியலில் ஈடுபட்ட 65 பேர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே கொத்தமங்கலத்தில் மாரியம்மன் கோயில் திருவிழாவில், ஒரு தரப்பு மக்கள் நீதிமன்றத்தில் பெறப்பட்ட தீர்ப்பின்படி  நிகழ்ச்சிகள் நடத்த உரிமை கோரி கோயில் முன்பு தர்னாவில் ஈடுபட்டனர். 
சம்பவ இடத்துக்குச் சென்ற தனி வட்டாட்சியர் யோகேஸ்வரன், கீரமங்கலம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி ஒரே நாளில் இருதரப்பினரும் நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்படுமெனக் கூறி சமரசம் செய்ததால் போராட்டம் கைவிடப்பட்டது.  இதையடுத்து, ஒரே நாளில் இரு தரப்பினர் நிகழ்ச்சி நடத்துவதை ஏற்க மறுத்த மற்றொரு தரப்பினர்  கொத்தமங்கலம் கடைவீதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியும் ஏற்க மறுத்ததால், 20 பெண்கள் உள்பட 65 பேர் கைது செய்யப்பட்டனர். 
இதனைத் தொடர்ந்து, திருவிழா காப்புக் கட்டுவது தொடர்பாக வருவாய்த் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.