புதுகை மாவட்டம் ஜகதாபட்டினத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜெகதாபட்டினம் கிளை சார்பில் ஞாயிற்றுக்கிழமை பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாவட்டச்செயலாளர் எம் .அன்வர்அலி தலைமை வகித்தார்.
மாவட்ட துணை செயலாளர் பதுர் ரஹ்மான் மற்றும் மாவட்ட துணைத் தலைவர் மெக்கானிக் ஷேக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. தலைவராக சித்திக் ரஹ்மான், செயலாளராக ரஷ்மத்கான், பொருளாளராக அயூப் கான், துணைத் தலைவராக செய்யது அபுதாஹீர், துணைச் செயலாராக யாசர் அகமது, மருத்துவரணி செயலாளராக முஹம்மது இபுராஹிம், தொண்டரணி செயலாளராக அசாரூதீன் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.
ஜகதாபட்டினம் செல்லனேந்தல் சாலையில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மத வழிபாட்டுத் தலம், 2 அங்கன்வாடி மையங்கள் உள்ள இடத்தில் 50 அடி தூரத்தில் அரசு மதுபானகடை திறந்துள்ளதால் பொதுமக்கள் மற்றும் பெண்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக மாற்றி அமைக்க வேண்டும். ஜகதாபட்டினம்
பெரியபள்ளிவாசல் அதையொட்டிய பொதுகுளத்திற்கு அருகே குப்பை மேடு காரணமாக அப்பகுதியில் கடும் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் துர்நாற்றம் காரணமாக பல நோய்கள் பரவும் வாய்ப்பு உள்ளதால் ஊராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 93.15! 20 காசுகள் உயர்வு!

ஓடிடியில் மிரள வைக்கும் திரில்லர் திரைப்படம்: எதில் பார்க்கலாம்?

96 வயதில் காலமான ரியல் மாட்ரிட் அணியின் லெஜண்டரி வீரர்!

பிகார் புதிய அமைச்சரவையில் யார் யாருக்கு எந்தெந்த துறைகள்?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை

