புதுக்கோட்டை மாவட்டத்தில் வேளாண் இயந்திரமயமாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றார் மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ்.
இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
வேளாண் பொறியியல் துறையின் மூலம் வேளாண் இயந்திரமயமாக்கும் திட்டத்தின் கீழ் 2018 - 19 ஆம் நிதியாண்டில் மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள், கருவிகள் வாடகைக்கு வழங்கும் மையம் அமைத்தல் முதலான திட்டங்கள் செயல்பட்டு வருகிறது. சிறு, குறு, ஆதி திராவிட, பழங்குடியின, பெண் விவசாயிகளுக்கு 35 விழுக்காடு முதல் 50 விழுக்காடு வரையும், இதர விவசாயிகளுக்கு 25 விழுக்காடு முதல் 40 விழுக்காடு வரை அதிகபட்ச மானியத் தொகை வழங்கப்படுகிறது. உயர் தொழில்நுட்ப, அதிக விலையுள்ள இயந்திரங்களை வாங்கிட அதிக பட்சமாக ரூ.2 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது.
தனக்குத் தேவைப்படும் ஏதாவது 2 வேளாண் இயந்திரங்கள் அல்லது கருவிகளை மட்டுமே ஓர் ஆண்டில் மானிய விலையில் விவசாயிகள் வாங்கிடஇயலும். வட்டார அளவிலான வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு வழங்கும் மையங்கள் அதிக விலையுள்ள வேளாண் இயந்திரங்களை விவசாயிகள் குறைந்த வாடகையில் பெற்றிடும் வகையில் அமைக்கப்படுகிறது. இவ்வாறான ரூ.25 லட்சம் மதிப்புடைய வாடகை மையங்கள் அமைக்க 40 விழுக்காடு மானிய அடிப்படையில் அதிக பட்சமாக ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு, 04322 - 221816 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

