புதுக்கோட்டை மாவட்டத்துக்குள்பட்ட அரிமளம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை ஆட்சியர் சு.கணேஷ் புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.
அரிமளம் ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் கூறியது: கிராம மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் வகையில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, அரிமளம் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட கும்மங்குடி ஊராட்சி, தல்லாம்பட்டியில் ரூ.9.82 லட்சம் மதிப்பில் புதிய ஆழ்துளைக் கிணறு, ரூ.12,000 மதிப்பில் தனிநபர் இல்ல கழிவறை கட்டுமான பணி, பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் ரூ.1.70 லட்சம் மதிப்பில் தலா 2 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. மேலும், வாளரமாணிக்கம் ஊராட்சி, சமுத்திரப்பட்டியில் ரூ.8.50 லட்சத்தில் அங்கன்வாடி மைய கட்டடம், இடையன்வயலில் ரூ.24.42 லட்சத்தில் தார்சாலை, மேல்நிலைவயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.4.01 லட்சத்தில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டு வருகின்றன. இதுதவிர, முதலமைச்சரின் சூரிய ஒளியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தில் ரூ.2.10 லட்சம் மதிப்பிலான குடியிருப்புகள், மேல்நிலைவயல் முதல் மாவயல்பட்டி வரை ரூ.1.38 லட்சத்தில் சாலை சீரமைப்புப் பணி என மொத்தம் ரூ.53.75 லட்சத்தில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது என்றார். வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மத்திய அமைச்சர் அமித் ஷா தலைமையில் தென்மண்டலக் குழு இன்று கூடுகிறது: நதிநீர்ப் பங்கீடு, பெண்கள் பாதுகாப்பு குறித்து விவாதம்
கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு
செவிலியா் கல்லூரி மாணவி தற்கொலை விவகாரம்: கல்லூரி முதல்வா் கைது

மழைநீா் வடிகாலில் கழிவுகளை கலந்த உணவு விடுதிக்கு ரூ. 50,000 அபராதம்
விடியோக்கள்
“பாஜகவின் குழந்தை தவெக”: திமுக மருது அழகுராஜ் விமர்சனம்


