இன்று கூடுகிறது காவிரி நீா் மேலாண்மை ஆணையம்!நீலகிரி மாவட்டத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புசர்க்கரை விலை குறையும்: சர்க்கரை ஆலை கூட்டமைப்புஆக. 27-இல் திருத்தணி முருகன் கோயிலில் 4 மணி நேரம் தரிசனம் ரத்துஎல்லை விவகாரம்: சீன வெளியுறவு அமைச்சருடன் அஜீத் தோவல் இன்று பேச்சுவாா்த்தை

"விநாயகர் சதுர்த்தி விழா அமைதியான முறையில் கொண்டாட வேண்டும்'

புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைதியான முறையில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார் ஆட்சியர் சு.கணேஷ்.

Published On :30 ஜனவரி 2024, 10:11 pm IST

புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைதியான முறையில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார் ஆட்சியர் சு.கணேஷ்.
புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி தொடர்பான ஆலோசனைக் கூட்டத்திற்கு தலைமை வகித்து அவர் மேலும் பேசியது: விநாயகர் சதுர்த்தி விழா செப்.13ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளதையொட்டி பாதுகாப்பு குறித்து பல்வேறு வழிகாட்டுதல் நெறிமுறைகளை தமிழக அரசு வழங்கியுள்ளது.
விநாயகர் சிலை அமைக்க பட்டா இடமாக இருப்பின் சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களிடமும், பொது இடங்களாக இருப்பின் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து தடையில்லாச் சான்று பெற வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட காவல்நிலையம், தீயணைப்புநிலையத்தில் தடையில்லாச் சான்று பெற வேண்டும். விநாயகர் சிலைகள் வைக்கப்பட்ட நாளிலிருந்து 5 நாள்களுக்குள் கரைக்க வேண்டும். கரைப்பதற்கு அனுமதிக்கப்பட்ட இடங்களில் காவல்துறையினரால் பரிந்துரைக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே சிலைகளை வாகனங்களில் கொண்டு சென்று கரைக்க வேண்டும். 
புதுக்கோட்டையில் புதுகுளம், பொன்னமராவதிக்கு பொன் புதுப்பட்டியில் உள்ள செங்கை ஊருணி, ஆலங்குடிக்கு செட்டிக்குளம், திருவரங்குளத்துக்கு தெப்பக்குளம், அறந்தாங்கிக்கு வீரமாகாளியம்மன் கோயில் குளம், கம்மங்காடுக்கு முத்த ஊரணி, குலமங்களத்திற்கு பெரிய குளம், பனங்குளத்துக்கு தெற்கு உடையார்புரம் ஊருணி, புளிச்சங்காடு கைகாட்டி அனவயல் பகுதிக்கு மூக்கரை பிள்ளையார் கோயில் ஊருணியில் சிலை கரைக்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
மாவட்டத்தில் மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் விநாயகர் சதுர்த்தி விழாவை அமைதியாக கொண்டாட வேண்டும் என்றார் ஆட்சியர். கூட்டத்தில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ்.செல்வராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் அ.ராமசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.