அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வு: இல்லத்தரசிகள் கவலை!சென்னை உள்பட 17 நகரங்களுக்கு 4,000 டன் வெங்காயம் விநியோகம்!15.36 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் செயல்படவில்லை: ஆர்டிஐ தகவல்இந்தியாவில் இருந்து அதிக டீசல் இறக்குமதி செய்யும் ஐரோப்பிய நாடுகள்!நேபாளத்தில் 5,000 போ் நிலை என்ன? உடல்களை அடையாளம் காணும் பணியில் சவால்!!பெரும் எதிர்பார்ப்பில் தமிழக சட்டப்பேரவை: முதல்வர் விஜய் இன்று பதிலுரை!

ஆலங்குடி, பொன்னமராவதி கோயில்களில் கும்பாபிஷேகம்

ஆலங்குடி அருகேயுள்ள ஆலங்காட்டில் பெரமையா முனீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

Published On :30 ஜனவரி 2024, 10:15 pm IST

ஆலங்குடி அருகேயுள்ள ஆலங்காட்டில் பெரமையா முனீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
ஆலங்குடி அருகேயுள்ள ஆலங்காட்டில் உள்ள பெரமையா முனீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற திருப்பணிகள் நிறைவடைந்ததையொட்டி கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி, கடந்த இரு தினங்களாக கோயிலில் யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. 
தொடர்ந்து, யாக சாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு வேத விற்பன்னர்கள் வேதமந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில், சுற்றுவட்டார மக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். வடகாடு போலீஸார் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டனர்.
பொன்னமராவதி: பொன்னமராவதி அருகே உள்ள கேசராபட்டி மண்டகட்டி கருப்பர் மற்றும் மாயக்குறத்தி கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்றது. தொடர்ந்து, புதன்கிழமை 9.35 மணியளவில் விக்னேஷ் சிவாச்சாரியார் தலைமையில் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரினை கும்பத்தில் ஊற்றி குடமுழுக்கு செய்யப்பட்டது. விழாவில், சுற்றுவட்டார பொதுமக்கள் திரளாகப் பங்கேற்று வழிபட்டனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.