பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, சனிக்கிழமை நான்காம், ஐந்தாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதை முன்னிட்டு, கடந்த வியாழக்கிழமை கணபதி ஹோமத்துடன் தொடங்கி முதல்கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
வெள்ளிக்கிழமை விக்னேஸ்வரபூஜை மற்றும் இரண்டாம், மூன்றாம் கால யாகபூஜைகள் நடைபெற்றன. சனிக்கிழமை புண்யாகம், விசேஷசாந்தி, வேதபாராயணம் மற்றும் நான்காம், ஐந்தாம் கால யாகபூஜைகள் நடத்தப்பட்டன. பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். கபிலர்மலை செல்வகபில சிவாச்சாரியார் தலைமையிலான சிவாச்சாரியார்கள் பூஜையை வழிநடத்தினர்.
விழா ஏற்பாடுகளை குடமுழுக்கு விழாக்குழு தலைவர் மு.பழ. முத்துக்கருப்பன், செயலர் ராம. ராஜா, பொருளர் ராக. செல்வம் மற்றும் விழாக்குழு நிர்வாகிகள் செய்து வருகின்றனர். தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் 10 மணிக்குள் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஏஐ தொழில்நுட்பத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை வெளியிட வேண்டும்: ஐ.நா. வலியுறுத்தல்

யூடியூப் விடியோவில் ஏஐ காட்சிகளை அடையாளம் காண்பது எப்படி?

லவ் ஓ லவ் வெளியீட்டுத் தேதி!

குஜராத் வனத்துறை அதிகாரிகளைத் தாக்கிய வழக்கு: ஆம் ஆத்மி எம்எல்ஏ உள்பட 8 பேருக்கு சிறை!
விடியோக்கள்

சினிமா Shooting-தான் இது! முதல்வரின் பேச்சை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர்! | Udhayanidhi Stalin

”மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விடமாட்டோம்!” பேரவையில் முதல்வர் விஜய் பேச்சு! | TVK

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46



