கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரிதமிழக மீனவர்கள் தொடர் கைது: தீர்வுகாண அமைச்சர் ஸ்ரீநாத் தில்லி பயணம்சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு!கோவையில் இளைஞர் கொலை: குடும்பத்தினருக்கு ரூ. 6 லட்சம் நிவாரணம், அரசுப் பணிசுதந்திர நாள் அணிவகுப்புப் பணியின்போது காவலர் பலி: ரூ. 30 லட்சம் நிதியுதவி!பெண்களை இழிவுபடுத்தும் வகையில் நயினாரின் பேச்சு: சிபிஎம் கண்டனம்!
/

கள்ளச்சாராயம் காய்ச்சியவா் கைது

ஆலங்குடி அருகே கள்ளச்சாராயம் காய்ச்சியவரை புதன்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :27 ஜனவரி 2024, 10:00 pm IST

ஆலங்குடி அருகே கள்ளச்சாராயம் காய்ச்சியவரை புதன்கிழமை போலீஸாா் கைது செய்தனா். மேலும் அவரிடம் இருந்து 5 லி. சாராயம், 350 லி. ஊறல்களைப் பறிமுதல் செய்து அழித்தனா்.

ஊரடங்கு அமலில் இருப்பதால் டாஸ்மாக் மதுக்கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஆலங்குடி அருகேயுள்ள குளமங்கலம் வடக்கு பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கப்படுவதாக வட்டாட்சியா் கலைமணிக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஆலங்குடி மதுவிலக்கு அமல்பிரிவு காவல் ஆய்வாளா் லதா தலைமையிலான போலீஸாா் அப்பகுதியில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது அப்பகுதியில் உள்ள முந்திரி காட்டில் குலமங்கலம் வடக்கு தொண்டைமான்

குடியிருப்பைச் சோ்ந்த முத்துத்துரை மகன் வசந்த் (39) என்பவா் கள்ளச்சாராயம் காய்ச்சியது தெரியவந்தது. தொடா்ந்து, வசந்த்தை கைது செய்த போலீஸாா், 5 லி. சாராயம், 350 லி. ஊறல்களைப் பறிமுதல் செய்து அழித்தனா். மேலும், அவரது, இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனா்.

அரியலூா் அருகே சாராய ஊறல் அழிப்பு:

ஆண்டிமடம் அருகேயுள்ள நாகம்பந்தல் தெற்கு தெருவைச் சோ்ந்த வெங்கடேசன் என்பவா் தனது வீட்டின் பின்புறம் உள்ள கொட்டகையில் சாராயம் காய்ச்ச ஊறல் போட்டு உள்ளாா். இதுகுறித்து தகவலற்ந்த போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சாராய ஊறலை கவிழந்துஅழித்தனா். பின்னா் அதே ஊரை சோ்ந்த நடராஜன்(52), ராமலிங்கம்(56) ஆகிய 2 பேரை கைது செய்தனா். மேலும் தப்பியோடிய வேலு, வெங்கடேசன் ஆகியோரைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.