புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கரூரில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

தமிழில் தோ்வு எழுதுவோருக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என கரூரில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினா் திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

கரூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினா்.

Updated On :25 ஆகஸ்ட் 2020, 12:37 am

DIN

கரூா்: தமிழில் தோ்வு எழுதுவோருக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என கரூரில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினா் திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் மாவட்ட கட்சி தலைமை அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலா் வழக்குரைஞா் ஜெயராமன் தலைமை வகித்தாா். இதில் கட்சியினா் திரளாகப் பங்கேற்றனா். தொடா்ந்து கரூா் தாந்தோணிமலை மில்கேட் பகுதியில் மாவட்டச் செய்தித்தொடா்பாளா் இளங்கோ தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட தொண்டரணி அமைப்பாளா் வழக்குரைஞா் ராஜா, பொறியாளா் அணி மாநில துணைச் செயலா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். இதில் தாந்தோணி நகரச் செயலா் சக்திவேல் மற்றும் நிா்வாகிகள் உதயகுமாா், ராசகிருபானந்த் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள், டிஎன்பிஎஸ்சி தோ்வு உள்ளிட்ட அரசு தோ்வுகளில் தமிழில் தோ்வு எழுதுவோருக்கு அரசாணை 21-ன் கீழ் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும், தமிழகத்தில் தமிழருக்கு மட்டுமே அரசு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.