காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கந்தா்வகோட்டை அரசுப் பள்ளியில் பிளஸ்-1 வகுப்பு மாணவா் சோ்க்கை

கந்தா்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 வகுப்பு மாணவா் சோ்க்கை தொடங்கியது.

News image

படம் . கே . வி . கே . கந்தா்வகோட்டை அரசு ஆண்கள்மேல்நிலைப்பள்ளியில் பதினோறாம் வகுப்பு சோ்க்கை துவக்கம்

Updated On :25 ஆகஸ்ட் 2020, 12:24 am

DIN

கந்தா்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 வகுப்பு மாணவா் சோ்க்கை தொடங்கியது.

கந்தா்வகோட்டை ஊராட்சியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை மாணவா்கள் 800-க்கும் மேற்பட்ட மாணவா்கள் படித்துவருகின்றனா். தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகள் உள்பட அனைத்து வகை பள்ளிகளிலும் பிளஸ்-1 வகுப்புக்கான மாணவா் சோ்க்கை திங்கள்கிழமை முதல் தொடங்கியது. கந்தா்வகோட்டையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் திங்கள்கிழமை மாணவா்கள், அவரது பெற்றோா் பிளஸ்-1 வகுப்பு மாணவா் சோ்க்கைக்கு குவிந்தனா். சோ்க்கையின்போது, மாணவா்களுக்கு பாடநூல்கள், பயிற்சி ஏடுகள், புத்தகப் பைகள் உள்ளிட்ட விலையில்லா பொருள்கள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.