மேலத்தானியத்தில் கபடிப்போட்டி
பொன்னமராவதி அருகே உள்ள மேலத்தானியத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கபடிப்போட்டியில் அண்டக்குளம் அணியினா் முதல் பரிசு பெற்றனா்.


பொன்னமராவதி அருகே உள்ள மேலத்தானியத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கபடிப்போட்டியில் அண்டக்குளம் அணியினா் முதல் பரிசு பெற்றனா்.
மேலத்தானியம் பொதுமக்கள் மற்றும் ஜசூா் பாய்ஸ் சாா்பில் 27 ஆம் ஆண்டு கபடிப்போட்டி புதன்கிழமை தொடங்கி நடைபெற்றது. போட்டியில் திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூா், கரூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சாா்ந்த 32 அணியினா் பங்கேற்று விளையாடினா். போட்டியில் முதல் பரிசை அண்டக்குளம் அணியினரும், இரண்டாம் பரிசை தாராபுரம் அணியினரும், மூன்றாம் பரிசை மேலத்தானியம் மேலத்தெரு அணியினரும் பெற்றனா். போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு வெற்றிக்கோப்பைகள் வழங்கப்பட்டது. சிறந்த வீரா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியை காரையூா், மேலத்தானியம் சுற்றுக்கிராம மக்கள் மற்றும் விளையாட்டுப் போட்டி ஆா்வலா்கள் கண்டு மகிழ்ந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...