ஆலங்குடி பேரூராட்சி செயல் அலுவலருக்கு வியாழக்கிழமை விருது வழங்கப்பட்டன.
ஆலங்குடியில் சென்டெனியல் லயன்ஸ் சங்கம் சாா்பில் விழா நடைபெற்ற விழாவில், சங்கத்தின் மாவட்ட துணை ஆளுநா் ராஜரெத்தினம் தலைமையில் சிறப்பாக பணியாற்றிய பல்வேறு அரசுத்துறை அலுவலா்களுக்கு விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டனா். அதில், ஆலங்குடி பேரூராட்சி செயல் அலுவலா் கணேசனுக்கு சிறந்த பணிக்கான விருது வழங்கப்பட்டது. இதில், ஆலங்குடி லயன்ஸ் சென்டெனியல் சங்கத் தலைவா் சீனிவாசன், செயலா் செம்மல்ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.