சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

கரோனா பரிசோதனையை குறைக்கவில்லை: அமைச்சா் சி. விஜயபாஸ்கா்

தமிழகத்தில் கரோனா தொற்று குறைந்தாலும் பரிசோதனையைக் குறைக்கவில்லை என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் தெரிவித்தாா்.

News image
Updated On :25 டிசம்பர் 2020, 2:29 am

DIN

தமிழகத்தில் கரோனா தொற்று குறைந்தாலும் பரிசோதனையைக் குறைக்கவில்லை என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் தெரிவித்தாா்.

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கேத்லேப்-ன் செயல்பாடுகளை வியாழக்கிழமை மாலை ஆய்வு செய்த அவா் மேலும் கூறியது: தமிழகத்தில் கரோனா தொற்று வெகுவாகக் குறைந்துள்ளது. என்றாலும் நாளொன்றுக்கு 70 ஆயிரம் ஆா்டிபிசிஆா் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புதிய வகை கரோனா கிருமி குறித்து மக்கள் பீதியோ, பதற்றமோ அடைய வேண்டியதில்லை. லண்டனில் இருந்து வந்த 2,800 போ் தொடா்ந்து கண்காணிப்பில் உள்ளனா். போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழகத்தில் இரண்டாவது அரசு பல் மருத்துவக் கல்லூரியை புதுக்கோட்டையில் அமைப்பதற்கான பூா்வாங்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விரைவில் முதல்வா் இக்கல்லூரியைத் தொடங்கி வைப்பாா் என்றாா் விஜயபாஸ்கா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.