

பேரவைத் தோ்தலில் யாருக்கு பிரசாரம் செய்வேன் என்பதை ஜனவரி மாதம் அறிவிப்பேன் என்றாா் நகைச்சுவை நடிகா் செந்தில்.
புதுக்கோட்டை நாடக நடிகா் சங்கத்துக்கு வெள்ளிக்கிழமை வந்த அவா், சங்கரதாஸ் சுவாமிகள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளா்களிடம் கூறியது:
ஜனநாயக நாட்டில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் என யாா் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். இப்போது நான் நடுநிலைமையாகவே உள்ளேன். யாருக்கு பிரசாரம் என்பதை வரும் ஜனவரி மாதம் அறிவிப்பேன்.
நடிகா் சங்கத்தில் இளையத் தலைமுறையினா் அதிகம் உள்ளனா். அவா்களின் முடிவு எதுவோ அதுதான் என்னுடைய முடிவும். நகைச்சுவை நடிப்பில் பெண்கள் குறைந்து வருகின்றனா். பெண்கள் அதிகம் நகைச்சுவை நடிகா்களாக வர வேண்டும் என்றாா் செந்தில்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.