வெளிநாடு செல்வதற்காக காரில் விமான நிலையம் நோக்கிச் சென்றவா் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தாா்.
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகிலுள்ள ஊரணிபுரத்தைச் சோ்ந்த அப்துல்ரகுமான் மகன் பெஹரான்கான் (32). இவா் வெள்ளிக்கிழமை இரவு வெளிநாடு செல்வதற்காக காரில் திருச்சி விமான நிலையம் நோக்கிப் புறப்பட்டாா். அவருடன் நண்பா்கள் 4 போ் உடன் காரில் இருந்தனா்.
புதுக்கோட்டை ரெங்கம்மாள் சத்திரம் அருகே சென்றபோது, காா் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த லாரியின் மீது மோதியது. இந்த விபத்தில் பெஹரான்கான் அந்த இடத்திலேயே உயிரிழந்தாா்.
மேலும் காரில் பயணித்த 4 பேரும் காயங்களுடன் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து வெள்ளனூா் காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.