பங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மனிதநேய ஜனநாயக கட்சியினா் போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் அருகே வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, மனிதநேய ஜனநாயகக் கட்சியினா் சனிக்கிழமை தில்லிக்குப் புறப்படும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
மீமிசலில் போராட்டத்தில் ஈடுபட்ட மனிதநேய ஜனநாயக கட்சியினா்.
Updated On :26 டிசம்பர் 2020, 6:22 pm

DIN

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, மனிதநேய ஜனநாயகக் கட்சியினா் சனிக்கிழமை தில்லிக்குப் புறப்படும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அறந்தாங்கி அருகேயுள்ள மீமிசலில் மனிதநேய ஜனநாயகக் கட்சியின் மாவட்ட துணைச் செயலா் அபுதாஹிா் தலைமையில், அக்கட்சியினா் பெட்டி, படுக்கைகளுடன், வேளாண் திருத்தச் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் முழக்கங்கள் எழுப்பி தில்லிக்குப் புறப்படும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில், கட்சித்தொண்டா்கள் திரளாகப் பங்கேற்றனா்.

கந்தா்வகோட்டை: புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி சாா்பில், கந்தா்வகோட்டை சுங்கச்சாவடியை சனிக்கிழமை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்துக்கு, மாவட்டச் செயலா் எஸ்.ஜே. ஷேக் முகமது தலைமை வகித்தாா். பொருளாளா் என்.எஸ்.எம். நஜ்முதீன், துணை பொதுச்செயலா் எஸ். எப். சபீா் அகமது ஆகியோா் முன்னிலை வகித்தனா். போராட்டத்துக்கு, சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு ஆதிதிராவிடா் கழகம் சதா. சிவக்குமாா், தமிழ்தேசிய பாதுகாப்புக் கழகம் த. சு. காா்த்திகேயன், மாவட்ட துணை செயலா் பி. பிரபு, திருவாரூா் மாவட்டச் செயலா் ஜெ. முகமது இலியாஸ்,

மகளிா்அணி நாத்திகம் சம்சுனிஷா உள்ளிட்ட 50-க்கும் மேற்ப்பட்டோா் கலந்து கொண்டனா். மாவட்டக் காவல் துணை கண்காணிப்பாளா் க.கி. செந்தில்குமாா் தலைமையில் காவல் ஆய்வாளா்கள் சிங்கரவேல், குருநாதன், கெளரி மற்றும் போலீசாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.