ஓய்வூதியா்களுக்கு மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தல்
ஓய்வூதியா்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டுமென தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வுபெற்ற நல அமைப்பினா் வலியுறுத்தியுள்ளனா்.


ஓய்வூதியா்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டுமென தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வுபெற்ற நல அமைப்பினா் வலியுறுத்தியுள்ளனா்.
புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை அச்சங்கத்தின் பேரவைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், சங்கத்தின் மண்டல பொதுச்செயலா் இளங்கோவன் உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா். கூட்டத்தில், 2019 - 2020 ஏப்ரல் வரை ஓய்வுபெற்றவா்களுக்கு ஓய்வுகால பணப்பலனை உடனே வழங்க வேண்டும், ஓய்வூதியா்களுக்கு வழங்க வேண்டிய 62 மாத அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அமல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், சேமநல நிதி திட்டத்தின் கீழ் பிடிக்கப்பட்ட தொகையை உடனே வழங்க வேண்டும், குடும்ப ஓய்வூதியா்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய நிலுவையை உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...