மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கலிபோர்னியா ஹெலிகாப்டர் விபத்து படங்களைப் பரப்பி வதந்தி

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஹெலிகாப்டர் விபத்து எதுவும் நடைபெறவில்லை என மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி கேட்டுக் கொண்டுள்ளார்.

News image
Updated On :12 ஜூன் 2020, 7:23 am

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே செங்கானூர் ஊராட்சி வைந்தனூர் கண்மாயில் ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானதாக வெள்ளிக்கிழமை சமூக ஊடகங்களில் பரபரப்பான தகவல் பரவியது.

இதுகுறித்து விசாரித்தபோது ஆடியோவில் குறிப்பிட்டிருந்தபடி எந்த விபத்தும் நடைபெறவில்லை என அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் மறுப்பு ஆடியோ ஒன்றை வெளியிட்டார்.

கடந்த ஜனவரி 26ஆம் தேதி கலிபோர்னியாவில் நேரிட்ட ஹெலிகாப்டர் விபத்து ஒன்றின் படங்கள்தான் சமூக ஊடகங்களில் பரவும் படங்கள்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஹெலிகாப்டர் விபத்து எதுவும் நடைபெறவில்லை; வதந்திகளை நம்ப வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.