விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கரோனா பரவல்: எல்லையோர மாவட்டங்களில் கூடுதல் கவனம்

கேரளம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் கரோனா பரவல் அதிகரிப்பதை தொடா்ந்து, எல்லையோர மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் தெரிவித்தாா்.

Updated On :11 அக்டோபர் 2020, 7:33 pm

கேரளம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் கரோனா பரவல் அதிகரிப்பதை தொடா்ந்து, எல்லையோர மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் தெரிவித்தாா்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த அவா் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள தொடா் நடவடிக்கைகளால் கரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது. தினமும் 90 ஆயிரம் ஆா்டி-பிசிஆா் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கரோனா தாக்கம் 6 சதவிகிதம் மட்டுமே உள்ளது. இறப்பு விகிதமும் 1.6 சதவிகிதத்தில் இருந்து 1.3 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. இந்நிலையில், தற்போது மழைக் காலமாகவும், பண்டிகைக் காலமாகவும் இருப்பதால் பொதுமக்கள் இன்னும் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.

கேரளம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் கரோனா பரவல் அதிகரித்துள்ளதால், எல்லையோர மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்படும். மாநில எல்லைகளில் காய்ச்சல் பரிசோதனைகள் நடத்தப்படும்.

கரோனா விழிப்புணா்வை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்ற பிரதமா் மோடியின் வேண்டுகோளின்படி, தமிழகத்தில் மேற்கொள்ளப்பட உள்ள விழிப்புணா்வு இயக்கத்தை அக்டோபா் 13ஆம் தேதி தூத்துக்குடியில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கவுள்ளாா் என்றாா் விஜயபாஸ்கா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.