மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

திமுக கூட்டணி எஃகுக் கோட்டை:  பி.டி.அரசகுமார்

திமுக கூட்டணி என்பது எஃகுக் கோட்டை, அதில் கொட்ட முயன்றால் கைதான் வலிக்கும் என்றார் திமுக செய்தித் தொடர்பு செயலர் பி.டி.அரசகுமார்.

News image
கூட்டத்தில் பேசுகிறார் திமுக செய்தித் தொடர்பு செயலர் பி.டி. அரசகுமார்.
Updated On :12 அக்டோபர் 2020, 8:25 am

DIN

திமுக கூட்டணி என்பது எஃகுக் கோட்டை, அதில் கொட்ட முயன்றால் கைதான் வலிக்கும் என்றார் திமுக செய்தித் தொடர்பு செயலர் பி.டி.அரசகுமார்.

புதுக்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்ற திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி வலுவான கூட்டணி என்பது நாடறிந்த விஷயம். இந்தக் கூட்டணி எஃகுக் கோட்டை. அதில் யாரேனும் கொட்ட முயன்றால் அவர்களின் கை தான் வலிக்கும். ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி தமிழ்நாட்டில் அமைய வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பு. 

அது நிச்சயம் நடக்கும். தமிழ்நாட்டில் ஏராளமான முதலீடுகள் வந்திருப்பதாக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால், எந்தந்த தொழில்கள் தொடங்கப்பட்டுள்ளன, எத்தனைப் பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டுள்ளார். இதுவரை யாரும் பதில் சொல்லவில்லை.

அதேபோல, கரோனா கணக்குகளை மூடி மறைத்து அந்த வைரஸை விரட்டி அடித்துவிட்டதைப் போலப் பேசி வருகிறார்கள். தமிழக அரசு கரோனா பரவலைத் தடுக்கத் தவறிவிட்டதாக ஸ்டாலின் கூறியதை இதுவரை யாரும் மறுக்கவில்லை, விளக்கம் தரவும் இயலவில்லை என்றார் அரசகுமார். கூட்டத்தில், மாவட்டப் பொறுப்பாளர்கள் எஸ். ரகுபதி எம்எல்ஏ (தெற்கு), கே.கே. செல்லபாண்டியன் (வடக்கு), சொத்துப் பாதுகாப்புக் குழு உறுப்பினர் த. சந்திரசேகரன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.