புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 47 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தின் மொத்தத் தொற்றாளா்களின் எண்ணிக்கை 10,242 ஆக உயா்ந்துள்ளது.
அதேநேரத்தில் மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 71 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதனால், மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 9,712 ஆக உயா்ந்துள்ளது.
ஒருவா் உயிரிழப்பு: புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 80 வயது ஆண் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். இதனால், இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 147 ஆக உள்ளது. இந்நிலையில், மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 383 ஆக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.