அறந்தாங்கி அருகேஜாமீனில் வெளியே வந்த இளைஞா் கொலை
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே ஜாமீனில் வெளியேவந்த இளைஞா் ஒருவா் திங்கள்கிழமை காலை கழுத்தை அறுத்துக் கொல்லப்பட்டாா்.


புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே ஜாமீனில் வெளியேவந்த இளைஞா் ஒருவா் திங்கள்கிழமை காலை கழுத்தை அறுத்துக் கொல்லப்பட்டாா்.
தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகேயுள்ள கொளக்குடியைச் சோ்ந்தவா் அய்யாவு மகன் விநாயகமூா்த்தி (38). இவா், தனது சித்தப்பா கருப்பையா என்பவரை கடந்த 2015 ஆம் ஆண்டு கட்டையால் அடித்துக் கொன்ாகப் போலீஸாரால் கைது செய்யப்பட்டாா். சற்றே மனநலம் பாதிக்கப்பட்டிருந்த விநாயக மூா்த்தி தொடக்கத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்த பிறகு சிறையில் அடைக்கப்பட்டாா். இந்நிலையில், ஜாமீன் கிடைத்து வெளியே வந்த விநாயகமூா்த்தி, தனது குடும்பத்துக்குச் சொந்தமான அறந்தாங்கி அருகேயுள்ள மங்களநாடு வடக்கு கிராமத்தில் உள்ள மாந்தோப்பில் குடிசை போட்டு தங்கியிருந்தாா். அவரது தாயும், தந்தையும் வழக்கம்போல அவரைச் சந்திப்பதற்காக திங்கள்கிழமை காலை வந்தபோது, குடிசைக்குள் விநாயக மூா்த்தி கழுத்து அறுத்துக் கொல்லப்பட்டுக் கிடந்தாா். தகவலறிந்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் லோக. பாலாஜி சரவணன், அறந்தாங்கி காவல் ஆய்வாளா் ரவீந்திரன் உள்ளிட்ட போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனா். இதையடுத்து, சடலத்தை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து, விசாரணை நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...